நாயாக வேண்டுமா மனிதன்

 

ஏன் நாய்கள் மனிதனைவிட குறைந்த காலமே வாழ்கின்றன?

ஆறுவயது சிறுவனின் வியப்பூட்டும் பதில் இதோ.....


 

பத்துவயது நிறைவடைந்த ‘ஐரிஸ் வேட்டை நரி’ (Wolf Hound) வகையைச் சார்ந்த ‘பெல்கர்’என்ற பெயருடைய நாய் ஒன்றை பரிசோதிக்க, கால்நடை மருத்துவரான எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெல்கரின் உரிமையாளர்களான ரான் மற்றும் லிசா தம்பதியினர் மற்றும் அவர்களது மகன் குட்டிப்பையன் ஷேன் ஆகிய அனைவரும் பெல்கரின்பால் பேரன்பு கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஒரு அற்புதத்தை நம்பியிருந்தனர்.

பெல்கரை பரிசோதித்த நான், அவன் புற்றுநோயால் இறந்துகொண்டிருப்பதை அறிந்தேன். எந்த வகையிலும் பெல்கரை காப்பாற்ற முடியாத சூழ்நிலையை, அக்குடும்பத்திடம் விளக்கி கூறிய நான், பெல்கரை கருணை கொலை செய்ய பரிந்துரைத்தேன்.

அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, குட்டிப்பையன் ஷேனின் பெற்றோர்கள் என்னிடம், ஷேன் இக்கருணை கொலையை கவனித்தால் நல்லது என்று நினைப்பதாக கூறினார்கள். ஷேன் இதிலிருந்து சில முக்கிய அனுபவங்களை பெறமுடியும் என்று உணர்ந்தார்கள்.

மறுநாள் நான் அவர்களிடம் சென்றபோது, பெல்கரின் குடும்பம் அவனை சுற்றி நின்ற சூழலைப் பார்த்து துக்கத்தில் என் குரல்வளையில் நெறிகட்டியது. ஆனால், ஷேன் மிகவும் சாந்தமாக, கடைசி முறையாக பெல்கரை தடவிக்கொண்டிருப்பதை பார்த்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது அச்சிறுவனுக்கு நன்றாகப் புரிந்துள்ளது. சிலநிமிடங்களில் பெல்கர் அமைதியாக தன் உடலை விட்டுப் பிரிந்தான்.

இந்நிகழ்வை ஷேன் எந்தவித குழப்பமோ, சிரமமோயின்றி கடந்துவிட்டான் என்பது என் உணர்வு.பெல்கரின் பிரிவுக்குப்பின் சில நிமிடங்கள் நாங்கள் ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம். நாய்களின் வாழ்நாள் மனிதர்களைவிட குறைவாக ஏன் இருக்கவேண்டும் என்று வியந்துகொண்டிருந்தோம். ‘ஏன் என்று எனக்குத் தெரியும்என்று உரத்தக் குரலில் கூறினான், எங்களின் உரையாடல்களை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த ஷேன்.

அதிர்வுற்ற நாங்கள் அவனை நோக்கித் திரும்பினோம். பின்பு அவன் மொழிந்த அனைத்தும் என்னை உறையவைத்தது. நான் இதற்கு முன் இப்படி ஒரு ஆசுவாச விளக்கத்தை கேட்டதில்லை. அவன் கூறியவை என் முயற்சிகளின் பாதையையும், வாழ்வையும் மாற்றியமைத்தது.

மனிதர்கள் பிறக்கிறார்கள். அதனால் நல்வாழ்க்கை வாழ, அதாவது அனைவரையும் எப்பொழுதும் நேசிப்பது மற்றும் நல்லவர்களாக இருப்பது போன்றவற்றை கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், நாய்கள் அதை கற்க வேண்டிய தேவையில்லை. அவைகளின் வாழ்க்கை அதுவாகவே உள்ளதால் நம்மைப்போல் நீண்டகாலம் வாழவேண்டிய தேவை அவைகளுக்கு இல்லை”, என்று அந்த ஆறு வயதுசிறுவன் ஷேன் கூறினான்.



 

  • ·         எளிமையாக வாழுங்கள்
  • ·         வஞ்சகமின்றி அன்பு செய்யுங்கள்
  • ·         ஆழ்ந்து அக்கறை கொள்ளுங்கள்
  • ·         கனிவாக பேசுங்கள்





உங்கள் வாழ்கையில் ஒருநாய் உங்கள்ஆசிரியராக இருந்தால் நீங்கள் கற்றுக்கொள்பவை:

  • ·         உங்கள் அன்பிற்குரியவர் உங்கள் வீட்டிற்கு வந்ததும் எப்போதும் அவரை வரவேற்க ஓடுவீர்கள்.
  • ·         எந்த ஒரு மகிழோட்டதின் வாய்ப்பையும் தவறவிட மாட்டீர்கள்.
  • ·         ஏகாந்தமாக வாழ்வதற்கு புதிய காற்றை, தென்றலை அனுபவிப்பீர்கள்.
  • ·         அடிக்கடி குட்டித்தூக்கம் போடுவீர்கள்.
  • ·         எழுவதற்கு முன் உடலை  நீட்டி வளைப்பீர்கள்.
  • ·         தினமும் ஓடுவீர்கள், விளையாடுவீர்கள்,கும்மாளமடிப்பீர்கள்.
  • ·         பிறரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அவர்கள் உங்களை தொட அனுமதிப்பீர்கள்.
  • ·         மித வெப்பநாட்களில் உங்களின் பின்பகுதி புல்லின் மீது படாமல் படுத்துக்கொள்வீர்கள்.
  • ·         அதிவெப்ப நாட்களில் அதிகதண்ணீர் பருகிவிட்டு மரத்திற்கு அடியில் படுத்துக்கொள்வீர்கள்.
  • ·         நீங்கள் மகிழ்ச்சியுற்ற நேரத்தில், நடனம் ஆடுவீர்கள் மற்றும் உடலை அனைத்து பக்கங்களிலும் ஆட்டிகாட்டுவீர்கள்.
  • ·         ஒரு நெடுநடையின் மகிழ்ச்சிக்கே உற்சாகமாவீர்கள்.
  • ·         உண்மையாக இருப்பீர்கள்.
  • ·         நீங்களாக இல்லாத ஒன்றை நீங்கள்தான் என்று போலியாக நடிக்கமாட்டீர்கள்.
  • ·         புதைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரவிரும்பினால், அதுவெளி வரும்வரை தோண்டுவீர்கள்.
  • ·         யாராவது சோகமாக இருந்தால், அவர்கள் பக்கத்தில் அமைதியாக அமர்ந்து, பின்பு மெள்ள உங்கள் மூக்கால் அவர்களை கிளறி சாந்தமடைய செய்வீர்கள்.

இவைகளே ஒரு நல்ல நாயிடம் இருந்து நாம்பெறக்கூடிய ‘மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்

 

 

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Home Ads

Advertisement

Our Videos

Contact Form

Name

Email *

Message *

seemaan

Facebook

Blog Archive

Recent Posts