இந்த ‘கர்ணன்’கள் ஏன் முக்கியமானவர்கள்?





வெகுஜன சினிமாவில் #சமூகநீதி கருத்துக்களையும், அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு ஏதிரான நியாயங்களையும் பேசினால், கூறினால் அது எடுபடாது; அப்படிப் படங்கள் வெற்றிபெறாது என்று இதுவரை வக்கிரமாக பேசித்திரிந்தவர்களை ‘#கண்டா வரச்சொல்லுங்க’ என்று கையில் வாளோடு உலகத் திரையரங்குகளை ஆர்ப்பரித்து வலம் வந்துகொண்டிருக்கிறான் #’கர்ணன்’.


#தனுஷ்

இந்த மாபெரும் சீர்திருத்த, புரட்சிகர வெற்றிக்கு... நான் அறிந்தவரை, முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் சகோதரர் #தனுஷ்தான் என்பதை இயக்குநர் #மாரிசெல்வராஜ் அவரது அனைத்து பேட்டிகளிலும் சொல்கிறார். அந்தவகையில், இயக்குநர் மாரிசெல்வராஜின் மீதும், அவரது கதையின் மீதும் இப்படியொரு அசாத்திய நம்பிக்கையை வைத்து, கர்ணனாகவே வாழ்ந்திருக்கும் நடிகர் #தனுஷ் ஒரு தீர்க்கத்தரிசி. 


#கலைப்புலி எஸ். தாணு: 

சரி, தயாரிப்பாளர் #எஸ்.தாணு வெறும் முதலீடுதானே செய்தார்? அதுவும், வணிகமாக, லாபநோக்கில்தானே என்று அருவருப்பின் உச்சமாக கேள்வி கேட்பவர்கள் அல்லது புறம்பேசுபவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. கலைப்புலி எஸ். தாணு, ‘என் கடன் (பணி) சினிமா செய்து கிடப்பதே’ என்று, தானும் வாழ்ந்துகொண்டு, பலரை வாழ்வித்துக்கொண்டும் இருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், பணம் சம்பாதிக்கவும், லாபமீட்டவும் அவர் ‘#அசுரன்’, ‘#கர்ணன்’ போன்ற கதைகளை படமாக்க அவரது பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று எந்தவித அவசியமுமில்லை. ஐயா எஸ். தானுவிற்கும் சரி, #கர்ணன் தொடர்புடைய ஏனைய பிரதான நபர்களுக்கும் சரி, பொருளீட்டுவதுதான் முதன்மையான நோக்கம் என்றால் அவர்களுக்கு வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. படமாக்க எத்தனயோ #வணிகக் (கமர்சியல்) கதைகள் இருக்கின்றன. எனவே, #கர்ணன் என்கிற பிரம்மாண்டத் திட்டம், வணிகம் கடந்து சிந்திக்கப்பட்டது; சிரிஷ்டிக்கப்பட்டது. இந்த நல்ல நோக்கம் மற்றும் எண்ணத்திற்காகவும் தான் #கர்ணனுக்காக உழைத்தவர்கள், முதல் போட்டவர்கள் எல்லோருக்கும் பண மழை பொழிந்துகொண்டிருக்கிறது.


மாரிசெல்வராஜ்:

ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் படைக்கப்படுவதற்கும் அல்லது பிறப்பதற்கும் ஏதேனும் ஒரு முக்கிய நோக்கங்கள், காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றனர். நம் பிறப்பு... ஒரு விபத்து என்பது மடமை. இதை உணர்ந்தவர்கள் சொற்பமானவர்களே. அப்படி இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மட்டுமே அவர்களும் வாழ்ந்து பல இலட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்விலும் ஒளியேற்றிவைக்கின்ற வாழ்வாங்கு வாழ்வை வாழ்கின்றனர்.


#கர்ணனுக்கு கருவாக நின்று உரமேற்றிய இயக்குநராக மிளிர்கின்ற #மாரிசெல்வராஜை, இந்த மண்ணின் மைந்தனை பெற்றெடுக்க, சூல்கொண்ட நாள் முதல், பிரசவித்து... பின்னர் வளர்த்தெடுக்கும் வரை அவரது தாய் எவ்வளவு மெனக்கெட்டிருப்பாரோ அதற்கு நிகரான உழைப்பை, தியாகத்தை, அர்ப்பணிப்பை இப்படத்திற்காக #மாரிசெல்வராஜ் அளித்திருக்கிறார் என்பது எவ்விதத்திலும் மிகையான வார்த்தைகளல்ல. 

இப்படியொரு ஈரமான மனிதனை, பிசிரற்ற கலைஞனாக சினிமாவுலகம் கண்டெடுக்க உதவிய, அவரைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கும், துணை நின்ற சகோதரர் ரஞ்சித், இயக்குநர் ராம், நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோருக்கு தரமான படங்களை நேசிக்கும் பல்லாயிரக்கணக்கான திரை இரசிகர்கள சார்பாக கோடானுகோடி நன்றிகள்.



 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்: 

இயக்குநர் மாரியை தனுஷ் நம்ப, இவர்கள் இருவரையும் ஐயா கலைப்புலி எஸ். தாணு நம்ப, இந்த உண்மையான இலட்சிய கூட்டணிக்கு தனது இசை பயணத்தின் உச்சம் தொடுகிற அர்ப்பணிப்போடு மண்ணின் மணங்கமழ இசை சாம்ராஜ்ஜியம் நடத்திக்காட்டியிருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. பட்டித்தொட்டியெங்கும் இனி “#கண்டா வரச்சொல்லுங்க”, என்றும் “#உட்றாதீங்க யப்போவ், உட்றாதீங்க யம்மோவ்”, என்கிற வரிகள் இழந்ததையெல்லாம் மீட்கும் போராட்டத்தில் களமாடிக்கொண்டிருக்கும் வீழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட, நசுக்கப்படுகிற அனைத்து மக்களுக்குமான எழுச்சிப் பாடலாக, #மந்திரமாக ஒலிக்கும்.

 

உலகின் 99.99% சினிமா இரசிகர்கள் #கர்ணனை கொண்டாடிக்கொண்டிருக்க, “இல்லையில்லை.... இது சாதிப்படம். இது ஊருக்கு, உலகுக்கு அடுக்குமா?”, என்றெல்லாம் மரண ஓலமிட்டு, இயக்குநருக்கும், நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் மிரட்டல் ஊழையிடும் அற்ப, சொற்ப ஒரு சிலரை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. மதுரையில், #கர்ணனை நான்காவது முறையாக #கோபுரம் திரையில் நண்பர் ராஜாவோடு நேற்று பார்த்துவிட்டு, இப்படத்தை எதிர்ப்பவர்கள் குறித்து அவரது கருத்தை கேட்டபோது, அவர் கூறினார்,”சார்! இவனுக எல்லாம் இந்தப்படத்துல வர்ற கழுகு மாதிரி. ஊருன்னு ஒன்னு இருந்தா... மனுசங்களும் இருப்பாங்க, இப்படி கழுகுகளும் இருக்கும் சார். கழுகுகள் இருக்கும் வரை, இப்படி மனிதர்களும் இருப்பாங்க”, என்றார். உண்மைதான். #கர்ணனை ஆதரிக்கும், ஆராதிக்கும் 99.99% க்கு முன் எதிர்க்கும் 0.01% நபர்களின் எண்ணிக்கை, ஆழ்கடலில் கரைத்த சிறு பெருங்காயத் துண்டைப்போல. Let us ignore these mean species & their comments.


#கர்ணன் என்கிற இப்படியொரு காவியத்தை படைத்திட்ட தயாரிப்பாளர் எஸ். தாணு, நடிகர் தனுஷ், இயக்குநர் மாரிசெல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் இந்த படைப்பிற்கு துணை நின்ற அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழட்டும். குறிப்பாக, இந்த கொரோனா தீநுண்மி கொடுங்காலத்திலும் இப்படத்தை திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களும், வராதுவந்த மாமணியாக கருதி இப்படத்தை கொண்டாடிய, கொண்டாடிக்கொண்டிருக்கின்ற கோடானுகோடி இரசிகர்களும் வாழ்வாங்கு வாழட்டும்.


நன்றி!!!!

Share:

Recent Posts