கார்டூனிஸ்ட் பாலாவின் முகநூல் பதிவு

Bala G
சமூகப்பிரச்சினைகளுக்காக பேசுபவர்கள் உங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள் அல்ல!
---------------------------------------------------------------------------------------------------
மதுரையில் இருந்து உயிரோசை என்ற மாத இதழ் ஒன்று வருகிறது. விசயம் அந்த இதழ் பற்றி அல்ல.. அதன் ஆசிரியர் மாரிகுமார் Mari Kumarபற்றியானது. .
சமூகம் சார்ந்த பார்வை.. எழுத்து மீதான ஆர்வம் என வழக்கமாக ஒரு பத்திரிகையாளனுக்கான தன்மையுள்ளவர். அந்த ஆர்வத்தின் காரணமாக உயிரோசை இதழை பல ஆண்டுகளாக மதுரையிலிருந்து கொண்டு வருகிறார்.
பத்திரிகை நடத்துவது என்பது சாதாரணமானதில்லை. திமிங்கலம் வாயில் உருண்டை போடுவது மாதிரி.. பணத்தை எவ்வளவு போட்டாலும் தின்றுக் கொண்டிருக்கும்..
கற்றுக்கொடுப்பது என வேறு தொழிலை பொருளாதாரத்திற்கு வைத்திருப்பதால் சமாளித்துக்கொண்டிருக்கிறார்.
இதுவரை பார்த்ததில்லை.. எப்போதாவது பேசுவார்.. அப்படி பேசும்போதெல்லாம், ஃபேஸ்புக்கில் நீங்க போட்ட கார்ட்டூனை எங்கள் பத்திரிகைக்கு பயன்படுத்திக்கிறேன். அதற்கு எவ்வளவு அனுப்ப வேண்டும் என்று கேட்பார்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் அவர் அப்படி கேட்பது அதிர்ச்சியாகதான் இருக்கும். ஏனெனில் என்னுடைய கார்ட்டூன்களை கட்சியினர் உட்பட யார் யாரோ எடுத்து தங்கள் பிரச்சாரத்திற்கும் ஊடகங்களிலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
முன் அனுமதியும் பெறுவதில்லை. அதற்கு பணமும் அனுப்புவதில்லை. இணையத்தில் வெளியாகிட்டா அது பொது சொத்து என்பது நம் ஆட்களின் மனநிலை..
வேறு சிலர் இருக்கிறார்கள். பாலாவுக்கு வயிறு கிடையாது. சாப்பிடவே மாட்டார்னா பாருங்களேன்.. அதனால் உழைப்பை இலவசமாக எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் சமூகப்பிரச்சினைக்காக பேசுபவன் எழுதுபவன் வரைபவன் என்றால் நேர்ந்து விடப்பட்ட ஆடு என்பது அவர்களின் மனநிலை.
அதிலும் சிலருக்கு பாலா என்ற பெயர் எரிச்சலை கொடுப்பதால் கார்ட்டூனில் கையெழுத்தையும் அழித்துவிட்டு பயன்படுத்திக்கொள்வார்கள். அப்புறம் பாலா ஒரு அதிமுக அடிமை என்று எழுதுவார்கள்.. அவர்களின் அறம் அப்படி.
ஆனால் மாரி குமார் அவர்கள் கார்ட்டூனை பயன்படுத்த பணம் அனுப்புகிறேன் என்று அவராக சொல்லும் ஒரே காரணத்திற்காகவே அவரிடம் கராராக பணம் கேட்க மனம் வருவதில்லை.
அறத்தோடு இயங்கும் மனிதர்களை மதிப்போம்.. 
-கார்ட்டூனிஸ்ட் பாலா
www.linesmedia.in
Share:

Recent Posts