அம்மா வந்தார்கள் விரலி மஞ்சளோடு!

 


கரோனா தன் ரத்தக்கறை படிந்த காட்டேறி பற்களை காட்டி... நம்மை சுற்றி சுற்றி வந்து சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த கொடூரச் சிரிப்பை கண்டு குழப்பமடைந்தாலோ, பயந்தாலோ... அந்த உடலில் உயிர் இருக்காது. உயிர் போவதற்கு முன்னால்... சட்டத்துக்குட்பட்டே உங்களது பணமும், முதலும், சொத்தும் முழுமையாக போகும்.

 

ஏதோ ஒரு வகையில் சளியால் பாதிக்கப்பட்டு ‘ங்கொன..  ங்கொன’ வென்று பேசிக்கொண்டும், இருமிக்கொண்டும், மூக்கை சீந்திக்கொண்டும் நம்மை சுற்றி உறவுகளும், நண்பர்களும், மனிதர்களும் திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

 

இத்தருணத்தில்... அமைதியான சூழலில் மறைந்த என் அம்மாவைப் பற்றிய நினைப்பு வர... ஏனோ எனக்கு அம்மாவின் நினைவோடு விரலி மஞ்சளும் நினைவுக்கு வந்தது.



குழந்தை பருவம் முதல், வளரந்து இரண்டு முதுகலை பட்டங்களை பெற்று.... “எங்களுக்கு எல்லாம் தெரியும்”, என்கிற ‘டுபுக்கு’த்தனமான திமிர்நிலை வருகின்றவரை, சளி மற்றும் தடும காய்ச்சலுக்கு அம்மா எங்களை மருத்துவரிடம் அழைத்து போனதேயில்லை. நல்லெண்ணெயோ, வேப்பெண்ணெயோ, விளக்கெண்ணெயோ ஊற்றப்பட்ட திரியேற்றப்ட்ட ஒரு காமாட்சி விளக்கின் தீபத்தில், விளக்கில் ஊற்றப்பட்டிருக்கும் அந்த ஏதாவதொரு எண்ணையில் நனைக்கப்பட்ட விரலி மஞ்சளை அந்த விளக்கின் தீபத்தில் காட்டி / சிறிது வாட்டி அதில் வரும் புகையை நமது நாசியின் இரு துவாரங்களின் வழியாக... மாற்றி மாற்றி, நிதானமாக உள்ளிழுக்க பறந்துவிடும்... எப்படியாப்பட்ட சளியும், காய்ச்சலும். அந்த வகையில் இது இயற்கையின் பிரம்மாண்ட வரம் பெற்ற ‘இன்ஹேலர்’. இது அன்று....


இன்று, அம்மாவும் விரலி மஞ்சளும் நினைவுக்கு வந்து நாம் பலரிடம் விரலி மஞ்சள் இருக்கின்றதா என்று கேட்க, எவரது வீட்டிலும் இந்த மஞ்சள் இல்லை. பலருக்கு இந்த மஞ்சள் எப்படியிருக்கும் என்றுகூட தெரியவில்லை. எல்லோரது வீடுகளிலும் சமையலுக்கு ‘துரித தயாரிப்பு ‘(Ready made)... அரைத்த, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உடனடி மஞ்சள் பொடிகள்தான். கரோனா ஏன் அப்புறம் நம்மைப் பார்த்து கைதட்டி சிரிக்காது?




மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இரண்டாம் வகை தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். ‌விரலை‌ப் போ‌ன்று ‌நீளமாக இரு‌ப்பதால் இதற்கு ‌’விர‌லி ம‌ ஞ்ச‌ள்’ என பெயர் வந்தது. விரலி மஞ்சள் தா‌ன் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் மாபெரும் சக்தி இருக்கிறது.


கொஞ்ச காலமல்ல, இனி நிரந்தரமாகவே கொரோனாவை நம்மிடமிருந்து தள்ளிவைக்க, நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் இயற்கை, வீட்டு, பாட்டி மற்றும் சித்த வைத்திய முறைகளோடு முதன்மையானதாக இந்த விரலி மஞ்சள் ‘இன்ஹேல’ரையும் பேராயுதமாக இணைத்துகொள்வோம். இல்லையென்றால்.... கரோனா நம்மிடமும் வந்து பல்லிளிக்கும்.


 


தேவையான பொருட்கள்: ஒரு விளக்கு, அதனை திரியிட்ட தீபமேற்ற ஏதாவது ஒரு எண்ணை: நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணை. (இதில் நல்லெண்ணெய் கூடுதலான பயனைத் தரும் என்றும் ஒரு கருத்துள்ளது). முக்கியமாக.... விரலி மஞ்சள். (பார்க்க: இணைப்பில் உள்ள படங்கள்). பார்த்து.... படித்து... பகிர்ந்து... பயன்பெறுவோம். விரலி மஞ்சள் இயற்கையும், நம் முன்னோர்களும்  நமக்கு விட்டுச் சென்றிருக்கும் நற்கொடை கிருமிநாசினி.


- வையகப்பிரியன், உயிரோசை.16 – மே – 2021.அம்மா வந்தார்கள் விரலி மஞ்சளோடு!

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Home Ads

Advertisement

Our Videos

Contact Form

Name

Email *

Message *

seemaan

Facebook

Blog Archive

Recent Posts